Saturday, August 27, 2022

துரு

 உன்னை 

வாஞ்சையோடு அழைக்காத 

வார்த்தைகள் அனைத்துமே 

துருப்பிடித்து தான் போனது .....

Thursday, May 12, 2022

மனமெனும் குழந்தை

அழுதாலும் சிரித்தாலும் பசித்தாலும் தன் தாயை தேடியே ஓடும் பிள்ளையை போல் 

உன்னைத் தேடியே ஓடுகிறது என் மனமெனும் குழந்தை 







Saturday, December 4, 2021

சிறகொடிந்த பறவை

 மலைமுகட்டின் உச்சியில் நின்று தான் பறந்த கானகத்தை கண்டு விம்மும் சிறகொடிந்த பறவை போல் … 

கனவுகளை சுமந்து பறந்த காலங்களை எண்ணி அசைபோட்டு விம்முகிறது மனமெனும் சிறகொடிந்த பறவை .... 

Sunday, April 28, 2013

விழி





அந்த  வெள்ளை பாற்கடலில் நீந்தும்

கருப்பு மீன் - அவளது  கண் கரு விழி !!! 

Thursday, February 2, 2012

உன் காது மடல்கள் இரண்டும் வெண் சாமரமாய்,

அதை வர்ணிக்க வார்த்தையின்றி நான் பாமரனாய் ......
என் கவிதைகளுக்கான பெருமதிப்பே,

உன் இதல்கள் அதை தட்டு தடுமாறி படிக்கையில்தான் உண்டாகிறதோ ??

Sunday, October 30, 2011

என் காதல்

என் காதலும் இந்திய கம்யூனிசமும் ஒன்று தான்,

இரண்டிற்குமே உருப்பிடாத கோட்பாடுகள் உண்டு

என்றைக்கும் அரியணையும் ஏறாது....