Sunday, October 25, 2009

தேடல் !!!

தேடுகிறேன்

அன்று ஆற்றங்கரையில் என் கால் தடத்தை தொடர்ந்து பதிந்தாய் உன் கால் தடத்தையும்

இன்று அதே ஆற்றங்கரையில் நான், கால் தடம் பதிய வருவாயா நீ ??

தேடுகிறேன்

நீண்ட மின்வெட்டு ஏற்பட்ட அந்த இரவில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தெரிந்த என் பிம்பத்தோடு கலந்தாய் உன் பிம்பத்தை

இன்று அதே மின்வெட்டு, அதே இரவு ஆனால் உன் பிம்பம் மட்டும் எங்கே ??

தேடுகிறேன்

தாமரை நிறைந்த தடாகத்தில், அன்று மூழ்கி குளித்துக்கொண்டிருந்த நீ
என்னை கண்டதும் தண்ணீருக்குள் மறைந்தாய்

இன்றும் அதே தடாகம், நானும் இங்கே , மீண்டும் தோன்றுவாயா நீ தண்ணீருக்குள் மூழ்கி மறைய ??

இருப்பினும் தேடுகிறேன் உன்னை !!!

என்னை விட்டு பிரிந்தாலும்

என் எண்ணங்களை விட்டு பிரிய மறுக்கும் உன்னை

இன்னும் தேடுகிறேன்,கண்கள் சுழல்கிறது, கால்கள் தளர்கிறது ,

இறுதி மூச்சை உள்ளிழுக்கும் இத்தருணத்தில் கூட

தேடுகிறேன் உன்னை !!!

7 comments:

vyshnavi said...

Nalla kavidai sir..Gud work

Karthik said...

Nanri vyshnavi :)

Arun said...

mate.. sollave illa.. neenga kavidhai eludhuvinganu..!!

amazing mate.. gr8 work.. i luv it.. :)

Karthik said...

nanri arun, epoluthavathu eltuhuven :)

Abinaya Maya said...

really superb i like diz one very much

Abinaya Maya said...

really superb.. i like diz very much

Karthik said...

nanri maya abinaya :) Thank u so much :)