Saturday, April 5, 2008

நினைவுகள்

நீ எனக்களித்த அனைத்தையும்

உனது நினைவாக வைத்துக்கொண்டேன் .,

உனது திருமண அழைப்பிதழைத் தவிர ...!!

வலி

உன்னால் ஏற்பட்ட காயங்கள் மட்டுமல்ல ,

வடுக்கள் கூட வலிக்குதடி !!!

மாற்றம்

காதல் வந்த பிறகு சூரியனை சுற்றும்

பூமிப்பந்தை போல் எனது நிகழ்வுகளும்

உன்னை சுற்றியே ..!!

வினாத்தாளின் அச்சம்


உன் கண் கண்ட நாளிலிருந்து நான் கேட்கத்துடிக்கும்

கேள்விகள் ஆயிரம் .,

பதில் வருமா ?? பருவம் முடிவதற்குள் ??

முதன் முறையாக ஒரு வினாத்தாள் அஞ்சுகிறது .,

வரபோகும் விடைகளை எண்ணி ..!!

கேள்விக்குறி

எழுதப்படாத வாக்கியத்தில்

முடிக்கப்படாத வார்த்தைகள் ,

கார்புள்ளிஇடவா ?? முற்றுபுள்ளி வைக்கவா ??

எனக்குள்ளே கேள்விக்குறிகள் .,

விடை உனது வார்த்தை மையில்